ஆரம்ப-இறுதி நிலை நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) நோயாளிக்கு 24 மணி நேரத்தில் 1.2 லிட்டருக்கு மேல் சிறுநீர் வெளியேறினால் மற்றும் கிரியேட்டினின் 6க்கும் குறைவாக இருந்தால் , உணவு மற்றும் இயற்கை மருத்துவம் மூலம், சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்து வருவதை நிறுத்தி, செயல்பாட்டை 30% முதல் 50% வரை அதிரித்து ஆரோக்கியமான இயல்பான வாழ்க்கையை நீண்ட காலம் வாழ முடியும். சிறுநீர் வெளியேற்றம் எவ்வளவு நன்றாக இருக்கிறதோ, அந்த அளவு சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். சிறுநீர் வெளியேறுவது படிப்படியாக குறையும்போது, சிறுநீரக செயல்பாடு அதிகரிக்கும் விகிதம் மற்றும் தொடர் செயலிழப்பை நிறுத்துவது கடினம்.
நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், மூட்டுவலி, சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மற்றும் சான்றுகள் அடிப்படையிலான உணவு மற்றும் இயற்கை வைத்தியம் மூலம் நான் உதவுகிறேன். நான் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில், தமிழ் நாட்டில், தஞ்சாவூரில் உள்ள எனது ஆரோக்கிய விடுதி (Jothi Prem Health Retreat) மையத்தில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன். இது ஒரு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை எடுக்கும் முறை. எனது அனுபவத்தின் அடிப்படையில், நல்ல சிறுநீர் வெளியேற்றம் (1 லிட்டர் அல்லது அதற்கும் மேல்) மற்றும் கிரியேட்டினின் 6க்கும் குறைவாக இருந்தால் , உணவு மற்றும் இயற்கை மருத்துவம் மூலம், சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்து வருவதை நிறுத்தி, செயல்பாட்டை 30% முதல் 50% வரை அதிரித்து ஆரோக்கியமான இயல்பான வாழ்க்கையை நீண்ட காலம் வாழ முடியும். ஒருவரின் சிறுநீர் வெளியீடு மேலும் மேலும் குறைவதற்கு முன்பும், கிரியேட்டினின் மற்றும் யூரியா அளவுகள் படிப்படியாக அதிகரிப்பதற்கு முன்பும், சிறுநீரக செயலிழப்பை சரிசெய்ய சரியான இயற்கை சிகிட்சையை தொடங்க வேண்டும். இந்த கட்டுரையில், சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்த நான் பயன்படுத்தும் கோட்பாடுகளை பகிர்கிறேன், அவை உலகம் முழுவதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலானவை.
சிறுநீரக செயலிழப்பு நோய் சிறுநீரக திசுக்களில் நாள்பட்ட ஆறா தோல்வியுற்ற காயத்தால் ஏற்படுகிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், IgA நெப்ரோபதி, SLE போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களுக்கு நாள்பட்ட காயத்தை ஏற்படுத்துகின்றன. நாள்பட்ட தோல்வியுற்ற ஆறா காயம் சிறுநீரகத்தில் இரத்தத்தை வடிகட்டும் நெஃப்ரான்களில் குளோமருலஸ் எனப்படும் மிக சிறிய மெல்லிய இரத்த நாளங்களில் குளோமருலோஸ்கிளிரோசிஸ் (குளோமரு இரத்த நாளம் தடிப்பு) மற்றும் ஃபைப்ரோஸிஸ் (தழும்பு திசு உருவாக்கம்) ஏற்படுத்துகிறது. நாளடைவில்சிறுநீரக செயல்பாடு இழப்பு மற்றும் சிறுநீரகங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கிறது.
படிப்படியாக செயலிழந்து வருவதை நிறுத்த அல்லது மெதுவாக்க, மிகக் குறைந்த தாவர அடிப்படையிலான புரத உணவு முக்கியமானது. நமது உடல் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பை சேமிக்க முடியும், ஆனால் புரதத்தை சேமிக்க முடியாது. 50 கிலோ எடையுள்ள ஒருவருக்கு 50 கிராம் புரதம் அதிக போதுமானது. அதிகப்படியான புரத உட்கொள்ளல் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். எனவே பெரும்பாலான மக்கள் அவர்களின் அதிக புரதம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எண்ணி அதிக புரதத்தை உட்கொள்வதன் மூலம், தினசரி சிறுநீரகத்தை பாதிக்கிறார்கள். மிருக புரத உட்கொள்ளல் அதிக யுரேமிக் நச்சுகளை ஏற்படுத்துகிறது மற்றும் நோயின் தொடர் சிறுநீரக செயலிழப்பை வேகப்படுத்துகிறது.
சிறுநீரகங்களில் ஃபைப்ரோஸிஸை (தழும்பு திசு உருவாக்கம்) நிறுத்த சமையலறை பொருட்களில் உள்ள தாவர மூலக்கூறுகளே (Phytochemicals) போதுமானவை. தொடர் சிறுநீரக செயலிழப்பை தடுக்க, உணவில் சிறுநீரகத்திற்கு அதிக சுமை தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சிறுநீரகச் செயல்பாட்டின் அளவைப் பொறுத்து, எளிமையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளோமெருலோஸ்கிளிரோசிஸை (குளோமரு இரத்த நாளம் தடிப்பு) சிறுநீரகதிற்கு உகந்த தாவர அடிப்படையிலான உணவு சீர் செய்ய உதவுகிறது.
மற்றொரு பிரச்சனை உடலில் அதிக யுரேமிக் நச்சுகள். தொடர் சிறுநீரக செயலிழப்பை தடுக்கவும், முழு உடலுக்கும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவும் இரத்தத்தில் உள்ள யுரேமிக் நச்சுகளை, நச்சு உறிஞ்சிகள் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
குளோமருலர் வடிகட்டுதல் விகிதம் (GFR) சிறுநீரகங்கள் எவ்வளவு நன்றாக வடிகட்டுகின்றன என்பதைக் காட்டுகிறது. சிறுநீரக செயல்பாடு இரத்த பரிசோதனையின் போது கணக்கிடப்பட்ட GFR மதிப்பின் அடிப்படையில், CKD நோயாளியின் நிலை தீர்மானிக்கப்படுகிறது.
சிறுநீர் 1 லிட்டர் க்கு மேல் வெளியேறினால், இயற்கை மருத்துவம் மற்றும் உணவு முறை மூலம், 2 முதல் 3 மாதங்களில் நிலை 5-ல் இருந்து 4-வது நிலைக்குத் முன்னேறலாம். நிலை 4 இல் இருந்தால், நிலை 3 க்கு முன்னேறலாம். நிலை 3 இல் இருந்தால், இரண்டு முதல் 3 மாதங்களில் நிலை 2 க்கு முன்னேறலாம். நிலை 2 அல்லது நிலை 1 இல் இருந்தால், 3 மாதங்களில் முற்றிலும் சரி செய்ய முடியும்.
ஒரு வருடத்தில், ஒருவர் கிரியேட்டினின் அளவை 8ல் இருந்து 1.8 ஆகக் குறைக்கலாம், ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? எனது நோயாளிகளில், சிலரில், நன் கண்ட அனுபவம். பெரும்பாலான நோயாளிகள் 4 முதல் 6 வாரத்தில் தங்கள் கிரியேட்டினின் அளவை 6 அல்லது 7 இலிருந்து 3 ஆகக் குறைக்க முடியும். எனது உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து நெறிமுறையை வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவதன் மூலம் அவர்களால் மேலும் குறைக்க முடிகிறது. சில நோயாளிகளுக்கு, நாங்கள் மிகவும் சிறிய முன்னேற்றம் பெறுகிறோம். இதற்கு கரணம் நீண்ட நாட்களாக சிறுநீரகத்தில் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது. படிப்படியாக சிறுநீரக செயலிழப்பு அதிகரிப்பதை நிறுத் ஒருவர் எவ்வளவு சீக்கிரம் சரியான நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து, நீண்ட சிறுநீரக செயல்பாட்டை பெறலாம்.
நவீன மருத்துவம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் வேகத்தை குறைக்கலாம், ஆனால் படிப்படியாக செயலிழப்பு அதிகரிக்கும் என்று கூறுகிறது. உண்மை என்னவெனில், முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், சிறுநீரகத்திற்கு ஏற்ற தாவர அடிப்படையிலான உணவு மற்றும் இயற்கை மருத்துவம் முறையை கடைப்பிடிப்பதன் மூலம், படிப்படியாக செயலிழப்பு அதிகரிப்பதை நிறுத்தி, செயல்பாட்டை 30% முதல் 50% வரை அதிரிப்பதன் மூலம் இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் வாழ முடியும்.
ஒரு ஆராய்ச்சியில், “ (நாள்பட்ட சிறுநீரக நோயில் தொடர் செயலிழப்பை தடுப்பதில் ஊட்டச்சத்தின் பங்கு) Role of nutrition in the prevention of the progression of renal disease. Annu Rev Nutr. 1997;17:435-55”, குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால் ‘பல சமயங்களில், இது அவர்களை எப்போதும் டியா**சிஸ்1 இல் இருக்காமல் தடுக்கும் ஒரு உணவு முறை’. எனது நோயாளிகளில் ஒருவரான திரு. பாஸ்கர், வயது 36, கிரியேட்டினின் 8.0 வரை சென்றதால், அதை 1.8 ஆகக் குறைக்க முடிந்தது. இப்போது அவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கை வாழ்கிறார். பல நோயாளிகளும் இதே போன்ற முடிவுகளைப் பெற்றனர் மற்றும் அவர்களின் அனுபவ பகிர்வு வீடியோக்கள் இந்த கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறுநீரகம் எவ்வாறு செயலிழக்கத் தொடங்குகிறது?
சிறுநீரக செயலிழப்பு ஒரு அமைதியான நாள்பட்ட நோய். பெரும்பாலானவர்களுக்கு சில ஆண்டுகளில் 80% முதல் 90% வரை இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பிறகு கண்டறியப்படுகின்றன. சிறுநீரகம் எவ்வாறு மெதுவாக செயலிழக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் இரத்தத்தை வடிகட்டும் சுமார் 10 லட்சம் (1 மில்லியன்) நெஃப்ரான்கள் உள்ளன. ஒவ்வொரு நெஃப்ரானும் குளோமருலஸ் எனப்படும் மிக சிறிய மெல்லிய இரத்த நாளங்களின் வலையமைப்பாகும். அவை நாளொன்றுக்கு 200 லிட்டர் இரத்தத்தை 24 மணி நேரமும் வடிகட்டும் நுண்குழாய்கள். அவைகள் முடியை விட மெல்லியவை.
“காரணம் எதுவாக இருந்தாலும் (நீரிழிவு / உயர் இரத்த அழுத்தம் / தன்னுடல் தாக்க நோய்கள் / கீல்வாதம் / முதலியன), நாள்பட்ட சிறுநீரக நோய் சிறுநீரக குளோமருலோஸ்கிளிரோசிஸ் மற்றும் ஃபைப்ரோஸிஸ் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.”
“Regardless of the cause (Diabetes / High Blood Pressure / Auto-immune Diseases / Gout / etc.), chronic kidney disease is characterized by glomerulosclerosis and tubulointerstitial fibrosis”
Reference:
Pathophysiology and Classification of Kidney Diseases
EJIFCC. 2009 Apr; 20(1): 2–11.
Published online 2009 Apr 20.
இப்போது கேள்வி என்னவென்றால், குளோமருலோஸ்கிளிரோசிஸ் மற்றும் ஃபைப்ரோஸிஸ் என்றால் என்ன?
இது சிறுநீரக நெஃப்ரான்களில் உள்ள இரத்தத்தை வடிகட்டும் குளோமருலஸில், இரத்த நாளம் தடிப்பு மற்றும் நெஃப்ரான்களில் உள்ள மெல்லிய இரத்த நாளங்களில் தழும்பு திசுக்கள் உருவாக்கம்.
மீண்டும், கேள்வி என்னவென்றால், இவ்விரண்டுக்கும் என்ன காரணம்?
அதே ஆராய்ச்சியில், இது சிறுநீரக திசுக்களில் நாள்பட்ட தோல்வியுற்ற காயத்தால் ஏற்படுகிறது என்று கூறுகிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், IgA நெப்ரோபதி, SLE போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களுக்கு நாள்பட்ட காயத்தை ஏற்படுத்துகின்றன. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கான காரணத்தை நீங்கள் இப்போது புரிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறேன்.
நெஃப்ரான்களில் இரத்தத்தை வடிகட்டும் குளோமருலஸில், குளோமருலோஸ்கிளிரோசிஸ் மற்றும் ஃபைப்ரோஸிஸ் மூலம் சிறுநீரகம் மெதுவாக செயலிழக்கத் தொடங்குகிறது. இதனால் சிறுநீரகம் நாளடைவில் சுருங்கும்.
சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்த
1. யூரிமிக் நச்சு நீக்கம்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறுநீரக செயலிழப்பு கண்டறியப்பட்டால், சிறுநீரகம் 30% – 10% சிறுநீரக செயல்பாட்டைக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில், இரத்தத்தில் யூரிமிக் நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுகள் நாள்பட்ட தொடர் சிறுநீரக செயலிழப்பின் வேகத்தை துரிதப்படுத்தும். நவீன மருத்துவம் ஒரு இயந்திரத்தின் மூலம் இரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றுவது போல, இரத்தத்தில் உள்ள நச்சுகளை FDA- அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நச்சுத்தன்மையற்ற வாய்வழி நச்சு நீக்கும் முறைகள் மூலம் அகற்றலாம். வாய்வழி நச்சு உறிஞ்சிகளை ஒருவர் குடித்து, அவை செரிமானப் பாதை வழியாகச் செல்லும்போது, அவை யூரியா மற்றும் பிற நச்சுப் பொருட்களைப் பிணைத்து, உங்கள் சிறுநீரகங்கள் வழியாக வடிகட்டப்பட வேண்டிய கழிவுப் பொருட்களின் எண்ணிக்கையைக் குறைத்து, மலம் மூலம் வெளியேற்றப்படும். இது சிறுநீரகம் தொடர்ந்து பாதிக்க படுவதை தவிர்க்க உதவுகிறது.
2. ஊட்டச்சத்து மருந்துவம்
அடுத்து தழும்பு உருவாகுதலை நிறுத்துவது மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த குணப்படுத்தக்கூடிய நெஃப்ரான்களை குணப்படுத்துவது. அதற்கு, நிரூபிக்கப்பட்ட ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இது தொடர் தழும்பு உருவாகுதலை நிறுத்தவும் மற்றும் கரைக்கவும் உதவுகிறது. இதை செய்யாமல் சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்து வருவதை தடுக்க முடியாது.
3. உணவு முறையின் பங்கு
சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்து வருவதை நிறுத்தவும், செயல்பாட்டை அதிரிக்கவும் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கவும் உணவுமுறை முக்கியமானது. சிறுநீரகத்திற்கு ஏற்ற தாவர அடிப்படையிலான உணவை நாங்கள் பரிந்துரைக்கிறோம். பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ள உணவு மிகவும் முக்கியமானது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, குறைந்த புரத உணவும் முக்கியமானது. முற்றிலும் சோடியம் (சமையல் உப்பு) இல்லாத உணவுவை பலர் எடுத்துக்கொள்கின்றனர். இது மிக பெரிய தவறு, உடலில் சரியான நிலையை விட சோடியம் அளவு குறைந்தால், உடல் சோர்வு, பெலன் இல்லாமை, விக்கல் என பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவ, குறைந்த சோடியம் (குறைந்த உப்பு) உணவைப் பின்பற்ற வேண்டும்.
எங்களிடம் சிறுநீரக செயலிழப்பு சிகிட்ச்சை பெற்று அரோக்கியமாக உள்ளவர்களில் சிலர்
Ms. Karpagam : கிரியாட்டின் 7.9 to 2.1
Mr. Jayaprakash: கிரியாட்டின் 7.8 to 3.5
திரு வெள்ளியங்கிரி அவர்களின் கிரியேட்டின் 4.7லிருந்து 3.0
சிகிச்சை பலன்கள்:
- ஒவ்வொரு 10 நாட்களுக்கும் கிரியேட்டினின் அளவை 1.0 முதல் 2.0 வரை குறைக்கிறது.
- நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக குணமாக உதவுகிறது.
- யூரியா மற்றும் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கிறது.
- 10 நாட்களில் புரதக் கசிவை (நுரையுடன் கூடிய சிறுநீர்) குறைக்கிறது.
- அரிப்பு மற்றும் கருப்பு புள்ளிகள் போன்ற தோல் அறிகுறிகள் மறைந்துவிடும்.
- சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது.
- கால் வீக்கம் குறையும்.
- ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
எனது சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்துவது பற்றி மேலும் அறிய, கீழ் உள்ள (Whatsapp) வாட்ஸ்ப் லிங்கை தொட்டு, தொடர்பு கொள்ளலாம்.